Saturday, 9 December 2017

General Tamil Part 2

வேற்றுமை:
1)
முதல் வேற்றுமை: இதனை "எழுவாய் வேற்றுமை" என்றும் கூறுவார். இதற்கு உருபு இல்லை.

2)
இரண்டாம் வேற்றுமை: இதனை "செயபடுபொருள் வேற்றுமை" என்றும் கூறுவார். இதன் உருபு = . இது ஆறு பொருளில் வரும், அவை ஆக்கல், அழித்தல்,அடைதல்,நீத்தல்,ஒத்தல்,உடைமை. 

3)
மூன்றாம் வேற்றுமை: இதனை கருவி வேற்றுமை என்றும் கூறுவார். இதன் உருபுகள் " ஆல்,ஆன்,ஒடு,ஓடு,உடன், கொண்டு". இது கருவி, கருத்தா, உடன்நிகழ்ச்சி பொருளில் வரும்.

4)
நான்காம் வேற்றுமை = இதனை "கொடை வேற்றுமை" என கூறுவார். இதன் உருபு "கு, பொருட்டு, நிமித்தம், ஆக". இது கொடை, பகை,நட்பு, தகவு, அதுவாதல்,பொருட்டு, முறை, எல்லை பொருளில் வரும்.

5)
ஐந்தாம் வேற்றுமை = இதனை " நீங்கல் வேற்றுமை" என்று கூறுவர். இதன் உருபு "இல், இன், இருந்து, நின்று, விட, காட்டிலும்". இது நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருளில் வரும்.

6)
ஆறாம் வேற்றுமை = இதனை "உடைமை வேற்றுமை" என்று கூறுவார்". இதன் உருபு "அது, ஆது, , உடைய ". இது கிழமை(உரிமை) பொருளில் வரும்.

7 )
ஏழாம் வேற்றுமை = இதனை "இட/கால வேற்றுமை" என்று கூறுவார்". இதன் உருபு "கண், உள், மேல், கீழ், இடம், இல் ". இது ஒப்பு, ஏது, நீங்கல் பொருளில் வரும்

 
எட்டாம் வேற்றுமை = இதனை "விளி வேற்றுமை" என்று கூறுவர். இதற்கு உருபு இல்லை.

No comments:

Post a Comment